நிர்மலா சீத்தாராமன் சந்தித்தது குறித்து சசிதரூர் டிவிட்…..

திருவனந்தபுரம்:

துலாபாரம் உடைந்து விழுந்து காயம் ஏற்பட்டதில், திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காங்கிரஸ் தலைவர் சசிதரூரை, இன்று காலை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரில் சந்தித்து நலம் பெற வாழ்த்து கூறினார்.

இருவரும் வெவ்வேறு அரசியல கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்த நிலையிலும், மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், நிர்மலா சீத்தாராமன் தன்னை சந்தித்தது குறித்து சசிதரூர் மருத்துவமனையில் இருந்து டிவிட் பதிவிட்டுள்ளார்.

அதில், கேரளாவில் நடைபெற்று வரும் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில், இன்று காலை நிர்மலா சீத்தாராமன் மருத்துவமனைக்கு வந்து தன்னை சந்தித்தார்.  அவர் தனது கையை பிடித்து விரைவில் நலம் பெற ஆறுதல் கூறினார்.

இதுபோன்ற மரியாதை நிமித்தமான சந்திப்புகள்  இந்திய அரசியலில் ஒரு அரிய நல்லொழுக்க த்திற்கு உதாரணம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் சசிதரூர் தெரிவித்துஉள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Nirmala Sitharaman, Shashi Tharoor
-=-