நெய்வேலி: என்.எல்.சி., தொழிற்சங்க அங்கீகாரத்திற்காக நடைபெற்ற தேர்தலில் சி.ஐ.டி.யு மற்றும் தொ.மு.ச., வெற்றி பெற்றுள்ளன. அண்ணா தொழிற்சங்கம் தோல்வி அடைந்துள்ளது.
download
இந்தத் தேர்தலில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., தொ.மு.ச., உள்ளிட்ட 6 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன.மொத்தம் 93 சதவீதம் ஓட்டு பதிவானது. இதில் சி.ஐ.டி.யு., க்கு 4,828 ஓட்டுக்களும் தொ.மு.ச.வுக்கு 2,426 ஓட்டுக்களும் கிடைத்தன. அண்ணா தொழிற்சங்கத்திற்கு 2,035 ஓட்டுக்களும் கிடைத்தன.
ஆளும் கட்சியான அ.தி.மு.கவின் தொழிற்சங்க பிரிவான அண்ணா தொழிற்சங்கம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.