மு. திருப்பதி (Thirupathy Muthukrishnan)  அவர்களின் முகநூல் விமர்சனம்:
 

ப்பா – – நியாயம் பேசுகின்ற ஒரு சினிமா..!!
ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இருக்கும் உறவைப் பேசுகின்ற படத்தில் மைய இழையாக இன்றைய கல்விச் சூழலை அழகாக நுழைத்திருக்கிறார்கள் கூடவே பெண்களிடம் இருக்கக்கூடிய கல்வி பற்றிய புரிதலையும்.
பொதுவாக குழைந்தைகளின் கல்விச் சூழலை தீர்மானிப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள்.
ஒரு குடும்பத்தில் குழந்தைகளின் கல்வி மீது அதிக அக்கறை கொண்டவர்கள் பெண்கள்தான் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால் அவர்கள் பள்ளிகளை தேர்ந்தெடுக்கும் முறை விமர்சனத்திற்குரியது.

பல நேரங்களில் அவர்களின் தேடுதலில் குழந்தைகளின் விருப்பம் , தேவைகள் என்பதெல்லாம் பின் தள்ளப்பட்டு அண்டை வீட்டாரிடம், உறவினர்களிடம், நண்பர்களிடம் அவர்களுக்கிருக்கும் மரியாதை?? முன்னிறுத்தப்படுகிறது. கல்வியைப் பற்றிய தவறான புரிதல், ஆங்கில மோகம்,தாழ்வு மனப்பான்மை, தாங்கள் படிக்காததால்தான் வசதி குறைவாக வாழ நேரிட்டது என்பது போன்ற தவறான எண்ணங்கள் உள்ளிட்டவையும் முக்கிய காரணிகளே.
எனது நண்பர் ஒருவர் தனது மகனை தமிழ்வழிப்பள்ளியில் சேர்க்க எவ்வளவோ முயற்சி செய்தும் கடைசிவரை அவரால் தன் மகனை தமிழ்வழிப்பள்ளியில் சேர்க்கவே முடியவில்லை காரணம் அவரது துணைவியாரின் நெருக்கடி.
திரைப்படத்தில் ஒரு காட்சியில் சமுத்திரக்கனி தனது மனைவியிடம் தனது மகன் எப்படி வளர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி பேசும் காட்சியில் ஆண்கள் கை தட்டி வரவேற்கிறார்கள் பெண்கள் அமைதியாக கணவர்களைப் பார்க்கிறார்கள்.
படத்தின் பல காட்சிகள் யதார்த்தம் பேசுகின்றன.ஆனால் உண்மையில் நாம் யதார்த்தத்திலிருந்து விலகி வெகுதூரத்திலிருக்கிறோம்.
பொதுவாக திரைப்படங்கள் ஒரு சமூகத்தின் கண்ணாடி போன்றது.அவை சமூகத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.இங்கே சமூக அவலங்களை உரக்கப்பேசுகிறவர்கள் குறைவாகவே இருக்கிறார்கள் அதில் முக்கியமானவர் சமுத்திரக்கனி..!!
அவசியம் பாருங்கள்….