சுவாதியை கொலை செய்தது, பிலால் என்கிற இஸ்லாமிய இளைஞர்தான் என்று முகநூலில் பதிவிட்டு,  பிறகு அதை நீக்கி மன்னிப்பு கேட்டார் காமெடி நடிகர் மகேந்திரன்.  அதே போல இன்னொரு விசயத்திலும்  செய்திருக்கிறார்  என்பதை விளக்குகிறார் முகநூல் பதிவர்  நம்பிக்கை ராஜ் (Nambikai Raj ) அவர்கள்.
ஒய். ஜி. மகேந்திரன்
ஒய். ஜி. மகேந்திரன்

 ‘போராடுவோம் போராடுவோம், மாடுகளுக்காக போராடுவோம்!’ என புரட்சிப் போராட்டம் நடத்தியவர் நம்ம ஊரு துப்பறியும் சாம்பு ஒய்.ஜி.மகேந்திரன்.
ஆசியாவின் மிகப்பெரிய இறைச்சி வெட்டும் கூடம் ‘அல் கபீர்’ நிறுவனம் என்றதும் புரட்சி போராட்டத்தில் இறங்கினவர் அந்த நிறுவனம் மார்வாடியான அதுல் சுபர்வாலுக்கு சொந்தமானது என தெரிந்ததும் சார்வாள் சைலன்ட் ஆகிட்டார்.

மகேந்திரன் பதிவு
மகேந்திரன் பதிவு

இப்போ சொல்லுங்கோ அல் கபீர் நிறுவனம் இயங்கலாமா? வேணாமா?

நாட்டையே ஆளும் பாஜக நினைத்தால் அல் கபீர் நிறுவனத்தை மூடி மாடுகள் கொல்லப்படுவதை தடுத்திருக்கலாமே?
அல்கபீர் விளம்பரம்
அல்கபீர் விளம்பரம்
குறைந்தபட்சம் மாடுகளுக்குக்கூட நீங்கல்லாம் உண்மையாக இல்லையே மனுசன்கிட்டேயா உண்மையா நடந்துக்கப்போறீங்க?