1
சிம்பு, பி.இ. முடித்து அதன் பின் எம்.பி.ஏ. படித்து அரியர்ஸுடன் வாழும் வழக்கமான ஸ்மார்ட்(!)பாய்.  தனது தங்கையின் தோழியான மகராஷ்டிரா பெண்ணை பார்த்தவுடன் வழக்கம் போல் ஒரு தலையாக காதலில் விழுகிறார். ஒரு கட்டத்தில் இந்த காதலில் அந்த பெண்ணும் (மஞ்சிமா) விழ.. இருவரும் பைக்கிலேயே நாடு முழுதும் சுற்ற கிளம்புகிறார்கள்.
கன்னியாகுமரி வரும்போது ஆக்சிடெண்டலாக, ஆக்சிடண்ட் நடக்கிறது.  சிம்புவுக்குதாதன் படு காயம். அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மஞ்சிமா தனது பெற்றோரை பார்க்க அவசரமாக மகாராஷ்டிரா கோயிங்.
 

சிம்பு
சிம்பு

அங்கே அவரது பெற்றோர் யாரோ சில ரவுடிகளால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பா உயிர் நிலைமை ரொம்ப மோசம். அம்மாவுககும் நல்ல அடி. மஞ்சிமாவுக்கு உதவ அங்கே யாருமில்லை.
இது சிம்புவுக்கு தெரிய வர.. தனது நண்பனை அழைத்துக் கொண்டு மகாராஷ்டிராவுக்கு கிளம்புகிறார்.
 
அங்கே மஞ்சிமாவுக்கு உதவி செய்யப் போய்.. திடுதிடுவென பல கொலைகளைச் செய்துவிடுகிறார் சிம்பு. உச்சக்கட்டமாக மஞ்சிமாவும் மரணிக்க…
தலைமறைவாய் வாழ வேண்டிய நிலைமை சிம்புவுக்கு.
தனது காதலியை கொன்றவர்களையும், தன்னைச் சிக்கலில் மாட்டியவர்களையும் பழி தீர்த்தாரா என்பதை வெள்ளித் திரையில் காண்க.
இந்த படத்தின் படப்பிடிப்புக்கு சிம்பு சரிவர வரவில்லை என்று ஏகப்பட்ட புகார்கள் கிளம்பின. ஆனால் ஒழுங்காக வந்திருந்தாலும் பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு ஏதுமில்லை. “காதல் கிறுக்கனாய்” சிம்புவைக் காட்ட முயற்சித்திருக்கிறார் இயக்குநர். பல காட்சிகளில் “காதல்” மைனஸாகி விடுவது சோகம்.
மஞ்சிமா
மஞ்சிமா

இதில் தனது சொந்த வாழ்க்கையை பற்றி அவரே கமெண்ட் அடித்துக்கொள்ளும் காட்சிகள் வேறு.
மஞ்சிமா மோகன் மலையாள
அறிமுகம். அழகாய் இருக்கிறார்.. பட்,. பயமாகவெல்லாம் இல்லை.. ரசிக்கவைக்கிறார். பாடல் காட்சிகளில் கூடுதல் அழகாயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
சிம்பு நண்பராக நடித்திருக்கும் சதீஷ், இன்ஸ்பெக்டர் காமெத்தாக நடித்திருக்கும் பாபா சேஹல் ஆகியோர் பேர் சொல்லும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டுகள். ரசிக்கவைக்கிறார்கள்.
டான் மற்றும் டானியின் ஒளிப்பதிவும், அந்தோணியின் படத் தொகுப்பும் பாந்தம்.
ஆச்சரியம்.. இசை ஏ.ஆர்.ரஹ்மான். சத்தமே எஞ்சியிருக்கிறது.
ஏ.ஆர். ரகுமான்
ஏ.ஆர். ரகுமான்

காதல் படமா, ஆக்சன் மசாலா படமா என்பதில் இயக்குநர் கவுதம் மேனனுக்கு குழப்பம் இருந்திருக்கிறது. ஆகவே முற்பாதி காதல், பிற்பாதி ஆக்சன் மசாலா என்று பிரித்திருக்கிறார். என்ன.. பார்க்கிறவர்களுக்குத்தான் ஒன்ற முடியவில்லை.
நம்ப முடியவில்லை.. இல்லை.. இல்லை.. என்று பெரும் பாடலே பாடலாம்.. பல காட்சிகளுக்காக.
 
ஒரே வீட்டில் இருக்கிறார்கள். ஆனால் சிம்புவின் பெயர் தெரியாதாம்!
சிம்பு ஓட்டும் பைக் வீட்டு வாசலில்தான் நிற்கிறது. ஒரு பாடல் காட்சியில்கூட பைக்கை கடந்துதான் செல்கிறார் மஞ்சிமா. ஆனால் பைக்கை பார்க்கவே இல்லையாம், பாவம்.
கவுதம்
கவுதம்

போகும் வழியில் திருநின்றவூரில் ஒரு வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி “கன்னியாகுமரிவரைக்கும் பைக்லயே டூர் போறோம். ராத்திரி தங்க இடமில்லை. உங்க வீட்ல தங்கிக்கலாமா…?” என்று கேட்டு தங்கிவிட்டு மறுநாள் கிளம்புகிறதாம் இந்த ஜோடி!
சிம்பு மூன்று வருடங்கள் தலைமறைவாக இருந்து பிறகு ஐ.பி.எஸ். ஆபிஸராக மாறி அதே கோலாப்பூரில் அதே ஸ்டேஷன் இருக்கும் பகுதிக்கு துணை கமிஷனராக வந்து நிற்கிறாராம்..
“ஸ்பாட்ல வந்துதான் வசனத்தை ரெடி பண்ணுவேன்” என்று ஒருமுறை ப்ரஸ் மீட்டிலேயே சொன்னார் கவுதம் மேனன். இந்த முறை கதை, திரைக்கதையையும் ஸ்பாட்டிலேயே தயார் செய்தார் போலிருக்கிறது.
உஷ்.. முடியல சாமி!