பேஸ்புக், ட்விட்டரில் ட்ரண்ட் ஆகிவரும் 'அட்ரா மச்சான் விசிலு'!  

Must read

சிவா, பவர் ஸ்டார் நடிப்பில் உருவாகியிருக்கும் “அட்ரா மச்சான் விசிலு” திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருக்கிறது.  இந்த படத்தின் டிக்கெட்டை இலவசமாக படக்குழுவினர் ஒரு போட்டியை அறிவித்திருக்கின்றனர்.

ஹீரோயின் நைனா சர்வார்
ஹீரோயின் நைனா சர்வார்

விசில் அடிக்கிற மாதிரி வீடியோ அல்லது போட்டோ எடுக்க வேண்டும். அதை பேஸ்புக்  அல்லது டுவிட்டரில் அப்லோடு செய்து #AdraMachanVisilu அல்லது @AdraMachanVisilu Tag பண்ண வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் 100 நபர்களுக்கு தலா 2 டிக்கெட் ஃப்ரீ!
இந்த விசில் அப்லோடு போட்டி சென்னை தியேட்டர்களுக்கு மட்டுமே. படங்களை வரும் ஜூலை 7ஆம் தேதி இரவுக்குள் அனுப்பிவிட வேண்டும். மறுநாள் முதல் டிக்கெட்டுகள் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர் அட்ரா மச்சான் விசிலு படக்குழுவினர்.
போட்டியை அறிவித்தவுடன், ஏராளமானோர், தங்கள் விசில் படத்தை அப்லோட் செய்து வருகிறார்கள் என்று உற்சாகமாகச் சொல்கிறது படக்குழு.

More articles

Latest article