டந்த வாரம் வெளியான “அப்பா” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை இயக்கி நடித்த சமுத்திரக்கனிக்கு நல்ல பெயரையும் (வழக்கம்போல்) வாங்கித்தந்திருக்கிறது.
தனது படத்துக்குக் கிடைத்துள்ள வரவேற்புக்கு நன்றி தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்  சமுத்திரக்கனி.
aa
 
அந்த பதிவு:
“பத்தாவது முடிச்ச கையோட சினிமால எதாவது பண்ணனும்னு சென்னைக்கு பஸ் ஏறி வந்தேன். ஆனா எதுவும் பண்ணமுடியாம ஊருக்கு போய்டேன்.. திரும்பி வந்தவன அடிக்காம உதைக்காம.. ‘நீ ஏதோ பண்ணனும்னு ஆசைப்படுறனு தெரியுது! ஆனா, படிச்சி முடி.. உனக்கு நான் சப்போர்ட் பண்றனு’ சொன்ன என் அப்பா, அடுத்த கொஞ்ச மாசத்துல இறந்துப் போய்ட்டார்.
ஆனா , இன்னைக்கு சினிமால ஓரளவு வந்துருக்கேனா அந்த வார்த்தை தான் காரணம்.. . இன்னமும் என் அப்பா என்கூட தான் இருக்காரு, என்னை ஊக்கப்படித்திட்டுதான் இருக்காருன்னு நம்பி ஓடிட்டு இருக்கேன்…
“அப்பா” படத்தைப் பார்த்து பாராட்டிய திருந்திய அப்பாகளுக்கும் மகன்களுக்கும் நன்றி..” என்று நெகிழ்ந்து நன்றி சொல்லியிருக்கிறார் சமுத்திரகனி.