1 (111)
நீண்ட இடைவேளைக்கு பிறகு உற்சாகமாய் களம் இறங்கியிருக்கிறார், பரத்.   வடிவுடையான் இயக்கும் “பொட்டு” படத்தில், அதிரடி நாயகனாக நடிக்கிறார்.  இவருக்கு ஜோடி இனியா. அதோடு, நமீதாவும் கனமான பாத்திரத்தில் நடிக்கிறார்.
POTTU (3245)
படம் பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம். அவர், “ பரபரப்பான பேய் படமாக இது இருக்கும். மருத்துவ கல்லூரி பின்னணியில்  படத்தை  உருவாக்கி இருக்கிறோம்.   சமீபத்தில் பொட்டு படத்தின் படப்பிடிப்பு கொல்லிமலையில் நடைபெற்றது.  ஆதிவாசிகள், பழங்குடியினர் பகுதிகளில் நடக்கும் காட்சிகளுக்காக கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயர மலைப்பகுதியில் அரங்குகள் அமைக்கப்பட்டு பரத், நமீதா, இனியா, நிகேஷ்ராம், ர்யன் சமந்தப்பட்ட காட்சிகள் பத்து நாட்கள் படமாக்கினோம்.
 
POTTU (8254)
 
நாங்கள் படப்பிடிப்பு நடத்திய இடம் ரொம்பவும் மேடானது வண்டி எதுவும் போகாது. 4 கிலோமீட்டர் எல்லோரும், எல்லா சாதனங்களையும் நடந்தே எடுத்தச் சென்று படமாக்கினோம்.  என்னுடைய முந்திய படமான சவுகார்பேட்டை படத்தில் இருந்த குறைகள் நிச்சயமாக பொட்டு படத்தில் இருக்காது. வேறு மாதிரி இருக்கும் என்றார் இயக்குனர் வடிவுடையான்.