டில்லி

லைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஏழைகளுக்கோ அல்லது அடித்தட்டு மக்களின் நலனுக்காக யாரும் பொது நல வழக்கு தொடர்வதில்லை என கூறி உள்ளார்.

லோக் பிரஹாரி என்னும் தன்னார்வு நிறுவனத்தின் தலைவர் சத்யநாராயண சுக்லா சமீபத்தில் உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடுத்திருந்தார்.  அதில் அவர் அரசியல் கட்சிகள் மதம், சாதி, இனம், மொழி ஆகியவைகளின் அடிப்படையில் பெயர்கள் வைத்திருப்பதை மூன்று மாதங்களுக்குள் மாற்றாவிட்டால் அந்தக் கட்சிகளை தடை செய்ய வேண்டும் எனக் கோரி இருந்தார்.  இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விசாரித்து வந்தார்.

விசாரணைக்குப் பின் இந்த வழக்கை தள்ளுபடி செய்த தீபக் மிஸ்ரா, மனுதாரரிடம், “என்றைக்காவது ஏழைகளின் நலனுக்கோ அல்லது அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துகோ ஏதாவது பொது நல வழக்கு யாராவது பதிந்துள்ளீர்களா?  நீங்கள் பதிவது எல்லாமே ஆடம்பர வழக்குகள் தான்.  உங்களுக்கு பெயரும் புகழும் கிடைக்க அமைச்சர்கள், தேர்தல் ஆணையம், கட்சிகள் ஆகியோர் மேல் வழக்கு தொடுக்கிறீர்கள்.  இவைகள் எல்லாம் பொது நல வழக்கு அல்ல, விளம்பர பெற போடப்படும் வழக்குகள்.

நான் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.  அரசியல் கட்சிகளுக்கு புத்திமதி சொல்வது நீதிமன்றத்தின் வேலை இல்லை.  கட்சிகள் தங்கள் பெயர்களுக்காக வெளியில் அடிதடி நடத்திக் கொள்ளட்டும்.  நீதிமன்றத்தில் தேவை இல்லை.  நீதி மன்றத்துக்கு அதை விட பல முக்கியப் பணிகள் உள்ளன.  இது போன்ற தேவையற்ற வழக்குகளை இனி நீதி மன்றம் எடுத்துக் கொள்ளாது” என கூறினார்.