பிக்பாஸ் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்….!

Must read

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் முழுவதும் சண்டை சச்சரவு என இருந்த நிலையில் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இன்றைய முதல் ப்ரோமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் அன்போடு மகிழ்ச்சியாக இருப்பதை காண முடிகிறது.

இந்த வாரம் நடைபெற்ற பால் கேட்ச் டாஸ்கில் ஆரி மற்றும் சோம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் ரியோ டாஸ்கில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் அவர் கேப்டனை தேர்ந்தெடுக்கும் டாஸ்கிற்கு நேரடியாக தகுதி பெற்றார்.

பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுக்கும் வகையில் புதிதாக தெர்மாகோல் டாஸ்க் வழங்கப்பட்டது. பால் கேட்ச் டாஸ்க்கில் அதிக புள்ளிகள் பெற்ற ஆரி, சோம் மற்றும் ரியோ இதில் கலந்து கொண்டனர். போட்டியாளர்கள் ஸ்பூனை வாயில் வைத்து கொண்டு தெர்மாகோலை நிரப்பி snow man தலையில் போட வேண்டும்.

 

More articles

Latest article