கிங்ஸ்டவுன்: தற்போது தனது 5வது உலகக்கோப்பையில் ஆடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில், தான் இத்தனை உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை என ஆச்சர்யத்தோடு கூறியுள்ளார்.

இவர் கடந்த 1999ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் போட்டி அணியில் இடம் பெற்றார். அப்போது முதல், 2003, 2007, 2011, 2015 மற்றும் இந்த உலகக்கோப்பையில் ஆடவுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணியில் மீண்டும் இடம்பெற்ற கிறிஸ் கெயில், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 போட்டிகளைக் ஒருநாள் தொடரில், இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடித்தார்.

“நான் இத்தனை உலகக்கோப்பை போட்டிகள் விளையாடுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. கடந்த 2 ஆண்டுகளாக எனது கடும் உழைப்பு, என்னை இந்த நிலையில் நிறுத்தியுள்ளது. எனக்கு தொடர்ந்து கிடைத்துவரும் ரசிகர்களின் ஆதரவு மிக மிக முக்கியமானது” என்று கூறியுள்ளார் அவர்.