வரும் ஏப்ரல் 11ஆம் தேதி மக்களவை தேர்தல் தொடங்குகிறது. பல்வேறு வியூகங்கள் வகுத்து, புதுமையான முறைகளில் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

பிரதமர் மோடி, தன்னுடைய ட்விட்டரில் “மக்கள் பாதுகாவலன் என்ற அர்த்தம் கொண்ட “சவுக்கிதார்”என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து பாஜக தலைவர்கள், நிர்வாகிகளும் பலரும் தங்களது பெயருக்கு முன்பாக சவுக்கிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டனர்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் : எப்போதும் தேவை ஏற்படும் பொழுது அரசியல் கட்சிகளுக்கு எதிராக நான் பேசியுள்ளேன். ஆனால், ஒரு கூட்டத்தினர் என்னை மிரட்டி, தவறாக பேசி வந்துள்ளனர். தற்போது, அவர்களில் பெரும்பாலானோர் தான் தங்களை சவுக்கிதார் என்று கூறிக்கொள்கின்றனர்.

இவ்வளவு ஏன், பாஜக தொழில்நுட்ப பிரிவு என்னை பற்றி கூறி வரும் போலி செய்திகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். நான் வருமான வரி கூட தவறாமல் செலுத்தி வருகிறேன். இதுவரை ஒரு பைசா கூட நான் ஏமாற்றவில்லை. அதனால், எப்போதும் அநீதிக்கு எதிராக பேசுவேன். நான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.