சென்னை:  இன்று சித்ரா பவுர்ணமியை ஒட்டி  பக்தர்கள் கிரிவலம் செல்ல ஏதுவாக இன்று மாலை முதல் இரண்டு நாட்கள் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

திருவண்ணாமலையில், அண்ணாமலையாக வீற்றிருக்கும்,  உலகை ஆளும் எம்பெருமான் வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரர்  கோயில் உலகப்புகழ் பெற்றது.  இது பஞ்ச பூத தலங்களில் ஒன்றான நெருப்பிற்கான தலம் ஆகும்.  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், மாணிக்க வாசகர் ஆகியோரால் பாடப் பெற்ற புகழ்பெற்ற தலமாகும்.

‘இங்கு தினசரி பல ஆயிரம் பேர் கிரிவலம் வந்து அண்ணாமலையாரின் அருணாசியை பெற்று வரும் நிலையில், பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பேர் அண்ணாமலையாரை சுற்றி கிரிவலம் சென்று சிவனின் அருளாசி பெற்று வருகின்றனர். ஆனால்,   திருவண்ணாமையில் கிரிவலம் செல்வதற்கு வருடத்தின் 365 நாட்களும் ஏற்றதாகும். எந்த மாதத்தில், எந்த நாளில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கிரிவலம் செல்லலாம் என்றும், அனைத்து நாளுமே சிறந்ததுதான் என ஆன்மிக பெரியோர்கள் கூறி வருகின்றனர்.

இந்த ஆண்டு (2026)  சித்ரா பவுர்ணமி,  வருகிற 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.52 மணிக்கு தொடங்கி மறுநாள் மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியின் போது 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்திற்கு வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறன்றனர்.‘

இந்த நிலையில், சித்ரா பவுர்ணமியை ஒட்டி பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  வழக்கமாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன், இன்று இரவு 9 மணி முதல் நாளை இரவு 11 மணிவரை திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 548 பேருந்துகளும், நாளை 565 பேருந்துகளும், நாளை மறுநாள் 35 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.

[youtube-feed feed=1]