திருவண்ணாமலை:
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு மே 17ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  பிரபலமான சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

இந்துக்களின் விசேஷ பண்டிகைகளில் ஒன்று சித்ரா பவுர்ணமி. அன்றைய தினம் திருவண்ணா மலையில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கானோர் திரள்வது வழக்கம். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
ஆனால்,  இந்த வருடம் கொரோனா  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த வருடம் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக  மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
வரும் 7ந்தேதி சித்ரா பவுர்ணமி வருவதை முன்னிட்டு  6ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரையில் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.