சென்னை:

மிழகத்தில் இன்று கொரோனா வைரஸின் தாக்கம்  நேற்றைய பாதிப்பை விட இன்று மேலும் அதிகரித்து உள்ளது. இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பரவிய நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3550 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகஅரசின் கையாலாகத்தனால் சென்னையிலும்  கொரோன பாதிப்பு மீகத்தீவிரமடைந்து வருகிறது

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையாக பாதிப்பு ஏற்பட காரணம் கோயம்பேடு மார்க்கெட் என கண்டறியப்பட்டு உள்ளது. தற்போது மார்க்கெட்டை மூடினாலும், ஏற்கனவே பரவிய கொரோனாவின் தாக்கம் தற்போது வெளிப்பட்டு வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட் மூடியதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேறிய வணிகர்கள், கூலித் தொழிலாளர்கள் காரணமாக இதுவரை கடலூர் – 129, விழுப்புரம் – 76, சென்னை – 63, அரியலூர் – 42, காஞ்சிபுரம் – 7 பெரம்பலூர், தஞ்சாவூர் திருவாரூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும் இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு 31 ஆக அதிகரித்து உள்ளது. அதே வேளையில்,  இன்று 30 பேர் டிஸ்சார் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் எணிங்ககை 1409 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் பாதிப்புக்குள்ளா மொத்த பாதிப்பு 3550 ஆக உள்ளது. இதில் 2107 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேர்.