கொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பணிகள் முழுவதுமாகப் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் சில சீரியல்கள் தங்களது ஒளிபரப்பையே ரத்து செய்துள்ளன. குறிப்பாக,சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘அழகு’, ‘கல்யாணப் பரிசு’, ‘தமிழ்ச்செல்வி’, ‘சாக்லேட்’ ஆகிய 4 சீரியல்களையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி இரண்டாம் பாகம் தொடர் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. தற்போது நடிகர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு நடிகர் நடிகைகள் மாற்றப்போவதாக ராதிகா சரத்குமார் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டிருக்கும் சித்தி 2 தொடரின் குழுவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பொன்வண்ணன் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக நிழல்கள் ரவி இடம்பெற்றுள்ளார். விரைவில் ‘சித்தி 2’ தொடரில் யாரெல்லாம் இடம்பெறவில்லை என்ற தகவலும் தெரிய வரும்.