கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம்சரண், சோனு சூட், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஆச்சாரியா’.

ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக மணிசர்மா, கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் முழுவீச்சில் படப்பிடிப்பைத் தொடங்கி நடத்தி வருகிறது.

தற்போது ‘ஆச்சாரியா’ படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.