மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், பீகாரை தளமாக கொண்டு, லோக் ஜனசக்தி என்ற கட்சியை நடத்தி வந்தார்.

கடந்த ஆண்டு அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தனது மகனும் மக்களவை உறுப்பினருமான சிராக் பஸ்வானிடம் கட்சி பொறுப்பை ஒப்படைத்தார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் இடம் பெற்று இருந்தது.

சிராக் பஸ்வானுக்கும், பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாருக்கும் ஒத்துப்போக வில்லை.

இதனால் அண்மையில் நடந்த பீகார் சட்டபேரவை தேர்தலில், சிராக்கின் லோக் ஜனசக்தி தனித்து போட்டியிட்டது.

அவரது கட்சி ஓட்டுகளை பிரித்ததால், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பல தொகுதிகளில் தோற்றது.

தேசிய ஜனநாயக கூட்டணியில், லோக் ஜனசக்தி நீடிக்கிறதா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள லோக் ஜனசக்தி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சிராக் உற்சாகம் அடைந்துள்ளார். அவருக்கு விரைவில் மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என தெரிகிறது.

– பா. பாரதி