சீனத் தயாரிப்பு ஆணுறைகள் மிகச் சிறியதாக இருக்கின்றன என்று ஜிம்பாவே சுகாதார அமைச்சர் புகார் தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜிம்பாவே எய்ட்ஸ் நோயால் (ஹெச்.ஐ.வி. பாஸிடிவ்) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 13.5 சதவிகிதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோயிலிருந்து மக்களை காக்க வெளி நாடுகளில் இருந்து ஆணுறைகளை அதிக அளவில் ஜிம்பாவே இறக்குமதி செய்கிறது. உலக அளவில் அதிகமாக ஆணுறைகளை இறக்குமதி செய்யும் ஐந்து நாடுகளில் ஒன்று ஜிம்பாவே என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் சீனாவில் இருந்து ஆணுறைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆணுறை தயாரிப்பதில் உலக அளவில் முக்கியமான நாடுகளில் ஒன்றாக சீனா விளங்குகிறது. இங்கு 300 நிறுவனங்கள் ஆணுறை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இவை வருடத்திற்கு  3 பில்லியன் ஆணுறைகளை உற்பத்தி செய்கின்றன.

இந்த நிலையில்தான், “சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆணுறைகள் நீளம் குறைவாக உள்ளன” என்று ஜிம்பாவே சுகாதார அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “நுகர்வோருக்கு ஏற்வாறு வசதியான பொருட்களை அளிப்பது நிறுவனங்களின் கடமை” என்றும் தெரிவித்துள்ளார்.