கொழும்பு:

ண்டி மாவட்டத்தில் கடந்த சிலநாட்களாக நடைபெற்று வரும் மத கலவரத்தை தொடர்ந்து இலங்கை முழுவதும் 10 நாட்கள்  அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் அரசு தோல்வி அடைந்த நிலையில், அங்கு அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்க முன்பு  கண்டி பகுதியில் இஸ்லாமியர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே மோதல் உருவானது. அதைத்தொடர்ந்து நடபெற்ற வன்முறைச் சம்பவத்தின்போது  தீயில் சிக்கி இளைஞரொருவர் உயிரிழந்தார்.

அதைத்தொடர்ந்து, வன்முறையாக பயங்கரமாக  மாறி மசூதி, மற்றும் கடைகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 10 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களும் 100 க்கும் மேற்பட்ட கடைகளும் உடைக்கப்பட்டுள்ளன.  பல இடங்களில் சிறு சிறு கல்வீச்சுச் சம்பவங்கள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நேற்று முதல் கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத கலவரம் நாடு முழுவதும் பரவாமல் தடுக்கும் வகையில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனத்தை இலங்கை அரசு அமல்படுத்தி உள்ளது.