சீனா :

டாக்டர் லீ வென்லியாங், வூஹான் மத்திய மருத்துவமனையில், கண் மருத்துவராக பணியாற்றினார்.

கடந்த டிசம்பர் மாத மத்தியில் இருந்து தன்னிடம்   வரும் நோயாளிகளை கவனித்த டாக்டர் லீ, ஒரு புதுவகையான வைரஸ் பரவுவதை உணர்ந்தார், பின் டிசம்பர் 30 ல் சக மருத்துவர்களை அறிவுறுத்தும் விதமாக இதனை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

 

அப்போது, இதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாத சீன  பொது சுகாதாரத்துறை அதிகாரிகள், இதுபோன்ற ஆதாரமற்ற பதிவுகளை போடக்கூடாது என அவரை எச்சரித்து அனுப்பியது.

பின்னர், கடந்த ஜனவரி 10ம் தேதி கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான டாக்டர் லீ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா  வைரஸ் அறிகுறிகள் வூஹான் நகரில்  நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் விழித்தெழுந்த சீன பொது சுகராதரத்துறை ஜனவரி 20 ல் இதனை மருத்துவ அவசரநிலையாக அறிவித்தது.

இந்நிலையில், ‘கொரோனா வைரஸ்’ எனும் உயிர்கொல்லியை உலகிற்கு முதலில்  அடையாளம் காட்டி  சிகிச்சைபெற்று வந்த டாக்டர் லீ நேற்றிரவு மரணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

டாக்டர் லீ வென்லியாங் மறைவிற்கு உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன, அவருக்கு வயதுக்கு 34 என்பது குறிப்பிடத்தக்கது.