வடகொரியா இன்று அணுகுண்டு சோதனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதால், சர்வதேச அரங்கில் பதற்றம் நிலவுகிறது.
வடகொரியா 6 வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தப் போவதாக செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது,
வடகொரியா கடந்த 2006-ம் ஆண்டு முதன்முதலாக அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டது. தொடர்ந்து 2009, 2013 ஆகிய ஆண்டுகளில் தலா ஒரு முறையும், கடந்த ஆண்டு 2 முறையும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இந்த சோதனைகளுக்காக ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
சியோல், 6-வது முறையாக இன்று வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்தவுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.
வடகொரியா கடந்த 2006-ம் ஆண்டு முதன்முதலாக அணுகுண்டு சோதனையில் ஈடுபட்டது. தொடர்ந்து 2009, 2013 ஆகிய ஆண்டுகளில் தலா ஒரு முறையும், கடந்த ஆண்டு 2 முறையும் அணுகுண்டு சோதனைகளை நடத்தி உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இந்த சோதனைகளுக்காக ஐ.நா. சபையும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
ஆனாலும் வடகொரியா இதில் விடாப்பிடியுடன் இருப்பதால், அந்த நாட்டின்மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. இந்த நிலையில், வடகொரியா 6-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
வடகொரியாவின் புங்கியேரி அணுகுண்டு சோதனை தளத்தில் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவது கடந்த 12-ம் தேதி எடுக்கப்பட்ட வணிக செயற்கை கோள் படங்கள் அம்பலப்படுத்தி உள்ளன.
இதை வடகொரியாவில் இயங்கி வருகிற ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது. வடகொரிய நாட்டை நிர்மாணித்த கிம் இல் சுங்கின் 105-வது பிறந்த தினம் இன்று கொண்டாடுகிறபோது இந்த அணுகுண்டு சோதனை நடத்தப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், ஆசியநாடுகளில் பத்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், நாளை மறுநாள் தென் கொரியாவுக்கு செல்கிறார். வடகொரியா தொடர்ந்து ஆத்திரமூட்டிக் கொண்டே இருந்தால், அமெரிக்கா நேரடியாக களமிறங்க வேண்டி இருக்கும் என ட்ரம்ப் சில தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அமெரிக்க துணை அதிபரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே, தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால், அதனால் அங்கு போரபாயம் ஏற்படும் என வடகொரியாவுக்கு ஆதரவாக உள்ள சீனா எச்சரித்துள்ளது. அப்படி ஏற்படும் போரில், யாருமே வெற்றி பெற முடியாது என்றும், ஆனால் அதன் பாதிப்புகள் மிக மோசமானதாக இருக்கும் என்றும் சீனா கூறியுள்ளது.
இந்த நிலையில்தான் வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தகவல், அந்தப் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை மட்டுமின்றி, உலகநாடுகள் அனைத்தையும் பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளது.