இலங்கை குப்பை கிடங்கு தீ விபத்தில் 11 பேர் பலி

Must read

கொழும்பு:

கொழும்புவின் வடக்கு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகி உள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்பு வடக்கு பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குப்பைமேடு மளமளவென சரிந்து விழுந்தது. அருகில் உள்ள வீடுகளில் தீ வேகமாக பரவியது.

இதனால் மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர். இதில் 50 முதல் 100 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாயின. தீயில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாயினர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சேத மதிப்பு குறித்து முழுமையான தகவல் கிடைக்கவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

More articles

Latest article