பீஜிங்: சீனாவிடம் வாங்கிய கடனை செலுத்தாததால், உகாண்டா நாட்டின்  சர்வதேச விமான நிலையத்தை  சீனா கைவசப்படுத்துகிறது. சீனாவின் அடாவடி செயல்  இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

ஏழைநாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளில் ஒன்று உகாண்டா. இது ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ளது. கடுமையான பொருளாதார பிரச்சினையில் சிக்குண்டு தவித்து வருகிறது.  இந்த நிலையில் வாங்கிய கடனுக்காக தனது நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தை யும் பறிகொடுக்கும் நிலைமைக்கு சென்றுள்ளது.

ஏற்கனவே சீனாவிடம் கடன் வாங்கிய இலங்கை, மாலத்தீவுக்கு அடுத்ததாக தற்போது உகாண்டா சிக்கி  தவிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் . கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனால் என்டெபே சர்வதேச விமான நிலையத்தை சீனா கையகப்படுத்தி கொள் ளலாம் என சீனா குறிப்பிட்டிருந்தது. இந்த வரியை நீக்க உகாண்டா கோரிய நிலையில், அதை ஏற்க சீனா மறுத்து விட்டது. தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே  அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று உகாண்டா அரசுக்கும், சீனாவின் எக்ஸிம் (EXIM – Export Import Bank) வங்கிக்கும், உகாண்டா அரசுக்கும் இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்ததில் சுமார் 207 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் தொகை எனவும் 20 ஆண்டுகள் கடன் காலம், 7 ஆண்டுகள் கருணை காலம் எனவும் இதற்கு இரண்டு சதவிகிதம் வட்டி என ஒப்புக்கொண்டு இந்த கடன் தொகையை உகாண்டாவுக்கு அளித்தது சீன அரசு. அதைத் தொடர்ந்து   சீனாவிடம் இருந்து  207 மில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,553 கோடி) உகாண்டா கடனாக பெற்றது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வரும் உகாண்டா, கொரோனா தொற்று காரணமாக மேலும் கடுமையான நெருக்கடிக்கு ஆளானது. இதனால், கடனை செலுத்த முடியாமல் திணறி வருகிறது. சீனாவிடம் வாங்கிய மொத்த கடனில் வெறும் 7 மில்லியன் டாலரை (சுமார் ரூ.52 கோடி) மட்டுமே உகாண்டா இதுவரை திருப்பி செலுத்தியுள்ளது. இன்னும் 200 மில்லியன் டாலர் (சுமார் 1,501 கோடி) பாக்கி உள்ளது.

இதையடுத்து ஒப்பந்தப்படி, தவணைக்காலம் முடிந்துவிட்டதால், உகாண்டா  நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான என்டெபி விமான நிலையம்  சீனா கைக்கு செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீன நாட்டின் அடாவடி நடவடிக்கை உலக நாடுகளிடையே அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.