பெரு நாட்டில் அகழ்வாய்வில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட ‘மம்மி’ ஒன்றை கண்டெடுத்திருக்கிறார்கள்.

உலகில் வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பாடம் செய்யப்பட்ட ‘மம்மி’ போல் இல்லாமல், ஆணா பெண்ணா என்று தெரியாத வகையில் அமர்ந்த நிலையில் முகத்தை மூடியபடி உடல் முழுவதும் கயிற்றால் சுற்றப்பட்டு வித்தியாசமாக இருந்தது இந்த மம்மி.

பூமிக்கடியில் வட்ட வடிவிலான அறைக்குள் இருந்த உடலுக்கு அருகே, பானை, சிறிய வடிவிலான குடுவை, கல்லாலான கருவிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்றவையும் இருந்துள்ளன.

பெரு நாட்டின் லிமா பிராந்தியத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த ‘மம்மி’ குறித்து கரிமச் சோதனை நடத்தப்படும்போது, மம்மியின் தெளிவான காலமும் வயதும் தெரியவரும் என ஆய்வாளர்கள் கூறினர்.