கனடாவால் எங்கள் நாட்டுக்குள் ஒமிக்ரான் வந்தது : சீனா கடும் விமர்சனம்

Must read

பீஜிங்

ஒமிக்ரான் வைரஸ் சீனாவுக்குள் வர கனடாவே காரணம் எனச் சீன அதிகாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

விரைவில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக்  போட்டிகள் தொடங்க உள்ளன.    இந்நிலையில் கொரோனா வைரசின் பிறப்பிடம் எனச் சொல்லப்படும் சீனாவுக்கு மீண்டும் அந்த வைரசின் புதிய வகை திரிபுகள் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.  சீனா கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது..

சீன சுகாதாரத்துறை அதிகாரிகள், ”ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட முதல் நபர்  கனடா நாட்டில் இருந்து  வந்த பார்சல் ஒன்றை பிரித்துப் பார்த்ததுள்ளார். அதன் மூலம் அவர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளார்.  அந்த பார்சல்  கனடாவில் இருந்து அமெரிக்கா, ஹாங்காங் வழியாக சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது

இதனால்  கனடாவில் இருந்து சீனாவிற்கு ஒமிக்ரான் நுழைந்துள்ளது.  இதையொட்டி, வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களை முழுமையாகக் கிருமிநாசினி தெளித்த பின்னரே கையாள வேண்டும். இதற்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பணியாளர்களை மட்டுமே ஈடுபடுத்தப்பட வேண்டும். , பார்சல்களை பிரிக்கும் போது கட்டாயம் கையுறைகள், முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும்” எனக் கூறி உள்ளனர்.

More articles

Latest article