இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவையை தொடங்கியது சீனா! ஆனால் இந்தியாவுக்கு…?

Must read

பீஜிங்: கொரோனா பெருந்தொற்றை உலக நாடுகளுக்கு பரப்பி உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்த சீனா, 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்க உள்ளது. ஆனால், இந்தியாவுக்கு விமான சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கொரோனா பரவல் காரணமாக, சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பிய, மாணவர்கள், தொழில்துறை நிபுணர்கள் மீண்டும் சீனா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு சீனா சமீபத்தில் சர்வதேச விமானங்களின் செயல்பாட்டைத் தொடங்கியது. இருப்பினும், அறிக்கைகளின்படி, கடந்த மாதம் பெய்ஜிங் இந்திய தொழில் வல்லுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான விசா தடையை நீக்கிய பிறகும், இந்தியாவுக்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும், பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும்,  நாட்டிற்கு வருபவர்களுக்கான நடைமுறைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் நியமிக்கப்பட்ட ஹோட்டல்கள், உள்வரும் பயணிகளுக்கு முந்தைய 2-நாள் தனிமைப்படுத்தலில் இருந்து வீட்டில் 3 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

சர்வதேச விமான சேவையை தொடங்கி உள்ள சீனா இந்த வாரத்தில் மட்டும்,  சீனாவில் இருந்து 2,025 விமானங்கள் கிளம்ப உள்ளதாக  தெரிவித்து உள்ளது.

முன்னதாக இந்தியா சீனா இடையே கடந்த 2020–ம் ஆண்டு நவம்பர் மாதம் முறையான விமான சேவை இல்லை. கடந்த மாதம் தான் இந்திய மாணவர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சீனா நீக்கியது. ஆனால், விமான சேவை துவங்காத காரணத்தினால் இந்தியர்கள் அங்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More articles

Latest article