இந்தியாவில் ஹிவாவேக்கு (Huawei) தடை விதிக்கக் கூடாது! சீனா எச்சரிக்கை

Must read

டந்த ஜீீலை 10ம் தேதி இந்தியாவுக்கான தூதர் அழைத்து அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் ஹிவாவே (Huawei)  நிறுவனத்திற்குத் தடை  விதிக்கக்குடாது என்றும் அவ்வாறு விதித்தால் சீனாவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் விளைவுகளைச் சந்திக்கவேண்டியதிருக்கும் என்றும் அமெரிக்காவில் நிர்ப்பந்தத்தினை பொருட்படுத்தாமல் சுயமாக முடிவெடுக்கவேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தியாவில் 5 ஜி தொழில்நுட்பங்களை ஏற்படுத்தி ஹிவாவே (Huawei)  நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது. ஆனால் இந்திய அரசாங்கம் 5ஜி சார்ந்த அனைத்து பணிகளையும் சில மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறது

இந்நிலையில் ஆனால் இதுவரை சீனா தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுமா  என்றும்  தெரியவில்லை.

இந்த செய்திகள்   இந்திய ஊடகங்களில் வெளியானதையடுத்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம்,  இந்தியாவுக்கான தூதரை அழைத்து அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் ஹிவாவே (Huawei)  நிறுவனத்திற்குத் தடை  விதிக்கக்கூடாது என்றும் அவ்வாறு விதித்தால் சீனாவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் விளைவுகளைச் சந்திக்கவேண்டியதிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது

இந்திய நிறுவனங்கள் குறைந்த அளவிலேயே சீனாவில் இயங்கிவந்தாலும் இந்தியாவின் பிரபலமான நிறுவனங்கள்  டிசிஎஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்றவை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-செல்வமுரளி

More articles

Latest article