பீஜிங்

ரு புதிய தங்க சுரங்கத்தை அருணாசலப் பிரதேச எல்லையில் சீனா தோண்டுவதால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

சீனா வெகுநாட்களாக இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிகளுக்கு உரிமை கொண்டாடி வருகிறது.   அத்துடன் அருணாசலப் பிரதேச திபெத்தின் ஒரு பகுதி என கூறி வருகிறது.   அந்தப் பகுதியில் சீன ராணுவம் அத்து மீறி படையெடுப்பதும்,  அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து விரட்டி அடிப்பதும் சகஜமாக ஆகி விட்டது.

சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்து பேசினார்.  அதன் பிறகு இந்த் பிரச்னைகள் முடிவுக்கு வரும் என கூறப்பட்டது.  ஆனால் சீனா அருணாசலப் பிரதேச எல்லையில் ஒரு தங்கச் சுரங்கம் தோண்ட ஆரம்பித்துள்ளது.    சுரங்கப் பணிகளுக்காக  சாலை வசதிகள் உள்ளிட்ட பலவற்றை சீனா அமைத்து வருகிறது.

இங்கு தங்கம், வெள்ளி உட்பட பல விலை உயர்ந்த் கனிமங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.    இந்த கனிமங்களின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.400 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.   மேலும் எல்லைப் பகுதியில் சுரங்கம் உள்ளதால் ராணுவ வீரர்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.  இதை ஒட்டி அந்த பகுதிகளில் மீண்டும் பதட்டம் நிலவுகிறது.