சீனா:
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் திபெத்துக்கு அருகில் உள்ள சிசுவான் மாகாணத்தில் அதிகப்படியான நில நடுக்கம் உருவாவது வழக்கம். இந்த நிலையில் நேற்று லுாடிங் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 8 ஆக பதிவானது.

இந்நிலையில், நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. மேலும், படுகாயமடைந்த 50 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களில் 29 பேர் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஹன்சி தீபெதின் நகரில் அமைந்துள்ள லுடிங்கை சேர்ந்தவர்கள் என்றும், 17 பேர் யாயன் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நிலநடுக்கத்தால் மாயமாகியுள்ளவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.