பெய்ஜிங்:

இந்தியாவின் ஆளில்லா விமானம் ஒன்று தங்களது வான் பகுதிக்குள் நுழைந்ததாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து அந்நாட்டு ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ இந்தியாவின் ஆளில்லா விமானம் ஒன்று அத்துமீறி சீன வான்பகுதிக்குள் நுழைந்து நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் இந்த நடவடிக்கை, சீனாவின் இறையாண்மையை மீறிய செயலாகும்’’ என்றார்.

இந்த செய்தி சீன மீடியாக்களில் வெளியாயின. இந்த செயலுக்கு சீனா அதிருப்தியும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. ஆளில்லா விமானம் விழுந்ததையடுத்து, சீன வீரர்கள் அதை எடுத்து எங்கிருந்து வந்தது என கண்டறிந்தனர். ஆளில்லா விமானம் எந்த இடத்தில் விழுந்தது என்பது குறித்தும், இது எப்போது நடந்தது என்பது குறித்து தகவல் வெளியியடப்படவில்லை.