சீனா: 18 வயதுக்குட்பட்டவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த தடை!

Must read

 
சீனா,
சீனாவில் 18 வயதுக்குட்டபவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
சீனாவில் சிறுவர்கள் அதிகமாக ஆன்லைன் கேம் விளையாட்டில் அடிமையாவதாக வந்த புகார்களை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
waiting
அந்தஆய்வின் முடிவில் 23 சதவிகித சிறுவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகும் சிறுவர்களின் எண்ணிகை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.
இதையடுத்து அந்நாட்டின் சைபர்பேஸ் துறை அதிரடி நடவடிகையில் ஈடுபட்டுள்ளது.
நள்ளிரவு தொடங்கி காலை 8 மணி வரை சிறுவர்கள் இணைய தளம் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
கேம் சென்டரில் இரவில் விளையாட வருபவர்கள் தங்களது வயது குறித்த ஆவணங்களை ஆன்லைன் கேம் சென்டர் நடத்துபவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இந்த நடவடிக்கை குறித்து பொதுமக்கள் இந்த மாத இறுதிவரை கருத்துத் தெரிவிக்கலாம் என்றும் சைபர்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறுவர்கள் அடிமையாவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு விளக்கம் அளித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article