மரணத்தின் பிடியில் சேகுவரா கேட்ட அதிர்ச்சி கேள்வி

Must read

இன்று: 09.10.2016
சே குவேரா நினைவு தினம்.
பொலீவிய நாட்டுக்கெதிராக புரட்சியைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அவரைக் கைது செய்து ஒரு பள்ளிக் கூடத்தின்a
அறையில் அவரை சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள்.
அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர்.
சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் சே குவேரா மெல்ல கண் திறக்கிறார்.
:யாரது?”
“தங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன்” மெதுவாக அச்சத்துடன் பதில் கூறுகிறார் ஆசிரியர்.
“இது என்ன இடம்?”
“பள்ளிக் கூடம்.”
“இத்தனை மோசமாக இருக்கிறதே. இங்கே எப்படி வகுப்புகள் நடத்துகிறீர்கள்? சிரம்மாக இல்லையா?”
அந்த நிமிடம். அந்த நொடி அப்படியே உறைந்து போகிறார் ஆசிரியர். இவரால் இந்தச் சூழ்நிலையில் எப்படி, இப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடிகிறது. வார்த்தைகள் இன்றி மலைத்து நிற்கிறார் ஆசிரியர்.
“கவலை வேண்டாம். ஒரு வேளை நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால், உங்களுக்கு ஒரு நல்ல பள்ளிக் கூடம் கட்டித் தருகிறேன்.”
கொண்டு வந்த உணவை, கீழே வைத்துவிட்டு, அழுதபடியே வெளியே ஓடுகிறார் ஆசிரியர்.
இவர்தான் சே குவேரா. மரணத்தின் வாயிலில் நின்ற போதுகூட, பள்ளிக்கூடத்தின் அவல நிலை பற்றிக் கவலைப் பட்டவர்தான் சே. சே குவேராவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை மறுநாள் அக்டோபர் 9ம் தேதி நிறைவேற்றப்பட்டது. உலகம் போற்றும் புரட்சிப் போராளியின் மூச்சு அடக்கப்பட்டது.
பாரதிதாசனுக்கு தபால் தலை வெளியிடப்பட்ட நாள்
உலகின் சிறந்த கவிஞர்களுள் ஒருவராகப் போற்றப்பட வேண்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். அவரை அறிந்தவர்கள்
b
பாரதிதாசன் என்றால் தமிழுணர்வு என அடையாளம் காண்கின்றனர். ஆனால், அரசியல் அறம், அறிவியல், இசைத்தமிழ், இயற்கை போற்றல், சிறுவர் இலக்கியம், தொழிலாளர் நலம், பகுத்தறிவு, பெண்ணுரிமை, பொதுவுடைமை, மண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு , எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் பாரதிதாசன்.
உலக அஞ்சல் தினம்
இன்று உலக அஞ்சல் தினம். சுவிசர்லாந்து பேர்ன் நகரில் 1874-ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்டது. அந்த நாளை உலக அஞ்சல் தினமாக ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் வாரமாக அக்டோபர் 9 முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
2
தபால் தலை சேகரிப்பில் பலர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஸ்டாம்ப் விற்பனை, பதிவு தபால்,விரைவு தபால், இ- போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் மற்றும் சேமிப்பு கணக்குகள் போன்ற பணிகளை மேற்கொண்டு தபால் துறை தனது மக்கள் சேவையை தொடர்ந்து வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமம், நகரம் வித்தியாசமின்றி இந்தியாவை, மக்களின் கலாசாரத்தை ஒருங்கிணைக்கும் பணியை தபால்துறை செய்து வருகிறது. பொது மக்களிடம் கடிதம் எழுதும் பழக்கம் இ-மெயில் வரவால் குறைந்திருந்தாலும், தபால் வழியாக அனுப்பப்படும் அலுவல் ரீதியான கடிதங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சேர்க்கும் பொறுப்பு இன்றும் தபால் துறை வசமே உள்ளது.
 

More articles

1 COMMENT

Latest article