இந்தியாவில் காற்று மாசு அதிகம்: உலக ஆய்வு நிறுவனம் தகவல்

Must read

 

வாஷிங்டன்:

ந்தியாவிலும் சீனாவிலும்தான் காற்று மாசுபாட்டால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதார ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

உலகளவில் உடலுக்குத் தீங்கு தரக்கூடிய விசயங்கள் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது.  2015 ம் ஆண்டில் காற்றுமாசுவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் டான் கிரீன்பாம், காற்றுமாசுவால் உலகளவில் நடந்த உயிரிழப்பில் 50 சதவிதத்துக்கு மேல் இந்தியாவிலும் சீனாவிலும்தான் என்று  கூறினார்.

உலகளவில் 42 லட்சம் பேர் காற்று மாசுவால் உயிரிழந்தனர் என்றும் இவர்களில் 22 லட்சம் பேர் இந்தியா மற்றும் சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். உலகின் 92 சதவித மக்கள் உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடிய காற்று மாசுள்ள பகுதியில் வாழ்வதாக அந்த நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

காற்று மாசால் இதய நோய், புற்றுநோய், கைகால் முடக்கம், நாள்பட்ட சுவாசப் பிரச்னைகள் உருவாகிறது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

More articles

Latest article