உக்ரைன் நாட்டின் வடகிழக்கு நகரமான கார்கிவ்-வில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து சிம்பன்சி வகை மனித குரங்கு ஒன்று தப்பிச் சென்றது.

இந்த குரங்கைப் பிடிக்க உயிரியல் பூங்கா ஊழியர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர்.

நகரின் தெருக்களில் இறங்கி ஓடிய அந்த சிம்பன்சி பல மணிநேரம் போக்கு காட்டியது.

பின்னர் மழை பெய்ய தொடங்கியதை அடுத்து ஓரிடத்தில் அமர்ந்த சிம்பன்சியிடம் ஊழியர் ஒருவர் அருகில் சென்று அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மழையில் நனையாமல் இருக்க ரெயின் கோட் கொடுப்பதாக அந்த ஊழியர் கூறியதைக் கேட்ட சிம்பன்சி அந்த கோட்டை மாட்டிக்கொண்டது.

பிறகு, அந்த மனித குரங்கை சைக்கிளில் உட்கார வைத்து ‘ஜு’-வுக்கு திரும்ப அழைத்துச் சென்றனர்.