டில்லி :
நாட்டிலேயே, உ.பி., மாநிலத்தில் தான், குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக இருப்பதாக, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குழந்தைத் தொழிலாளருக்கு எதிரான உலக தினத்தையொட்டி, ‘சைல்ட் ரைட்ஸ் அண்ட் யு’ எனப்படும், க்ரை அமைப்பு, ஆய்வு ஒன்றை எடுத்து வெளியிட்டிருக்கிறது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“இந்தியாவில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில், 56 சதவீதம் பேர் படிக்காதவர்களாகவோ, குடும்ப சூழ்நிலையால் படிப்பை பாதியில் விட்டவர்களாகவோ உள்ளனர்.
andhra-child-labour-295
7 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில், 26 சதவீதம் பேர் பள்ளிக்கே செல்லவில்லை.
குழந்தைத் தொழிலாளர்கள், பள்ளிக்குச்  சென்றாலும், பள்ளி நேரத்துக்கு முன்னும், பின்னும், நீண்ட நேரம் வேலை செய்யும் சூழ்நிலையே நிலவுகிறது. இதன் காரணமாக,  அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில், பாதியில் படிப்பை விட நேர்கிறது.
இந்தியாவில், உ.பி., மாநிலத்தில்தான் மிக அதிக அளவில்  குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில், பீஹார், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மாநிலங்கள்  இருக்கின்றன” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.