பாட்னா:
ந்து மதத்தைச் சேர்ந்த மருமகளை, தங்களது மதத்துக்கு மாறாவிட்டால் ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டிய இஸ்லாமிய மாமியார் மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உடந்தையாக இருந்த கணவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இந்து பெண் ஒருவர் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புல்வாரி பகுதியை சேர்ந்த ஆசிப் என்ற இஸ்லாமிய இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவர் காந்தி மைதானம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், “இஸ்லாமியரான ஆசிப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். திருமணத்து முன்பே இருவரும் மதம் மாற வேண்டாம் என்று முடிவு செய்தோம். ஆனால் திருமணம் முடிந்து ஆசிப் வீட்டுக்கு வந்த பிறகு என்னை இஸ்லாம் மதத்துக்கு மாறச்சொல்லி ஆசிப்பும், அவரது பெற்றோரும் வற்புறுத்துகிறார்கள். கொடுமைப்படுத்துகிறார்கள்.
மாட்டுக்கறி சாப்பிட்டு பழக்கமில்லாத என்னை வற்புறுத்தி சாப்பிட வைக்கிறார்கள்.
இந்நிலையில் அவரது மாமனார், மாமியார் அவரை கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைத்துள்ளனர்.
மேலும் இஸ்லாம் பற்றி அறிந்துகொள் என்று வலுக்கட்டாயமாக  மதரஸாவில் ஒரு மாதம் தங்க வைத்தனர்.images
என் கணவர் ஆசிப், நாங்கள் நெருக்கமாக இருப்பதை செல்போனில் பதிவு செய்து வைத்திருக்கிறார். நான் இஸ்லாத்திற்கு மாறவில்லை என்றால் அந்த காட்சிகளை  வெளியிடப் போவதாக என் கணவரும், அவரது  குடும்பத்தினரும் மிரட்டுகிறார்கள்” என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு, ஆசிப் குடும்பத்தார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.
மதம் மாறாவிட்டால், நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக மனைவியை கணவன் மிரட்டிய விவகாரம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.