சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வரும் 4ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. வரும் 30ம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந் நிலையில் நவம்பர் 4ம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். காணொளி காட்சி மூலம் இந்த ஆலோசனை கூட்டம் அன்றைய தினம் பிற்பகலம் 3 மணிக்கு நடக்கிறது.

கூட்டத்தில் 5 முக்கிய அம்சங்கள் குறித்து சண்முகம் ஆலோசிக்கிறார். கொரோன பரவல் தடுப்பு நடவடிக்கை, குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், பருவமழை முன் எச்சரிக்கை, வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான காப்பீடு திட்டம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.