சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 3ம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழக தலைமை தகவல் ஆணையர் உள்பட நான்கு ஆணையர்களின் பதவிகள் காலியாக உள்ளது. இடத்துக்கு, அதிகாரிகள் மட்டத்தில் கடுமையலான போட்டி நிலவி வருகிறது. தலைமை தகவல் ஆணையர் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட சிலர் போட்டியில் உள்ளனர்.
இந்தப் பதிவகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலுடன் அடங்கிய விரிவான அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் குழு கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
இதையடுத்து, அந்த அறிக்கை மற்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டவர்கள் குறித்து ஆலோசித்து தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையில் தேர்வு செய்யப்படும் இந்த பெயர்கள் அடங்கிய பட்டியல், ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்படும். அவருடைய ஒப்புதலுக்கு பிறகு , பதவி நியமனம் குறித்த உத்தரவு தமிழக அரசு இதழில் வெளிடப்படும்.