
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜுன் 12-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். இதனையொட்டி, மேட்டூர் அணையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் அவ்வப்போது நேரில் பார்வையிட்டு, அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமைக அமைந்துள்ள மேட்டூர் அணை ரூ 20 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு, ஆய்வு சுரங்கம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சிறுசிறு சேதங்களை சரிசெய்யும் பணியுடன், அணை பராமரிப்பு, புனரமைப்பு பணிளும் நடைபெற்று வருகிறது. இதை மாவட்டஆட்சியர், நீர்வளத்துறை ஆணையர் பல உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில், பாசனத்துக்காக அணையில்இருந்து, ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் வந்து மேட்டூர் அணை திறப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
120 கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் தற்போது 113.41 அடி நீர் உள்ளது. இந்த நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அந்த தண்ணீர் கமேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113 அடியை தாண்டியுள்ளது. தற்போது மேட்டூர் அணையில் 82.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தொடர்ந்து 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.