புதுச்சேரியை ஒட்டிய தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டமான விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இதனால், தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக நம்பிவந்த இந்தியாவின் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்கி உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கள்ளச்சாராயம் அருந்தி விழுப்புரத்தை அடுத்த முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன்

கள்ளச்சாராய விற்பனை யார் செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்துள்ளார்.

தவிர இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.