டெல்லி: 4 நாள் பயணமாக டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசுகிறார். அப்போது டெல்லி திமுக அறிவாலயம் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுகிறார்.
டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா 2ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி, பிரதமர், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி மற்றும் எதிர்க்கட்சிதலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்.
அதன்படி, நேற்று நாடாளுமன்றம் சென்ற முதலமைச்சர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களை சந்தித்தார். அத்துடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிதின்கட்கரியை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசின் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்ததுடன், திமுக அலுவலகம் திறப்பு விழாவில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
மத்திய அமைச்சர்களை சந்தித்தார். இதன்பின் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர், மேகதாது விவகாரம், நீட் விலக்கு, தமிழகத்துக்கு
இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.. இதன்பின் டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசு பள்ளிகளை கெஜ்ரிவாலுடன் இணைந்து முதலமைச்சர் பார்வையிடுகிறார்.
நாளை (ஏப்ரல் 2-ம் தேதி) மாலை 5 மணிக்கு டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முன்னிலையிலும் நடைபெறுகிறது.