சென்னை: தமிழ்நாட்டின் 27 சுங்கக்சாவடிகளில் இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதில் குறைந்த பட்சம் ரூ. 5 முதல் அதிக பட்சமாக ரூ.80 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில்  ஆண்டுக்கு ஒருமுறை கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறத. அதன்படி, ஏப்ரல் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சுங்கச்சாவடிகளில் இன்று முதல்  கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.  அதன்படி தமிழ்நாட்டில் சூரப்பட்டு, வானகரம்  உள்பட 27 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனுடன் எலெக்ட்ரானிக் டிக்கெட் இயந்திரம் (E-ATM) மற்றும் POS மற்றும் அங்கீகரிக்கப்படாத பிற அமைப்பு/மென்பொருளை கொண்டு NH கட்டண பிளாசாக்களில் பயனர் கட்டணம் வசூலிக்க கருவியை பயன்படுத்தவும் இன்ளு முதல் தடை அமலுக்கு வருகிறது. அதன்படி, FAStag அல்லது பணம் செலுத்தி மட்டுமே சுங்கச்சாவடிகளை வாகன ஓட்டிகள் கடக்க முடியும்.

இனிமேல் எலெக்ட்ரானிக் டிக்கெட் இயந்திரம் அல்லது கையடக்க பாயின்ட் ஆஃப் சேல் (POS) டெர்மினல், POS பில்லிங் மெஷின் போன்ற எந்தவொரு சாதனங்களையும் பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.