சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை 3ஆக பிரிக்கும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டு கூட்டத்தொடரின் இறுதிநாள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய தொடரில், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை 3ஆக பிரிக்கும் மசோதாவை பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்
சென்னை மாநகர காவல் ஆணையரகம் பிரிக்கப்பட்டு ஆவடி, தாம்பரம் புதிய ஆணையரகங்கள் அண்மையில் உருவாக்கப்பட்டது. அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]தாம்பரம், ஆவடி காவல் ஆணையர் அலுவலகங்களை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்