சென்னை: ரூ.18.20 கோடியில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டிடங்கள், மீன்வளத்துறை கட்டிடங்கள் மற்றும் மகளிர் விடுதியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து, தென்னை நார் கொள்கை 2024-ஐ வெளியிட்டார்.

காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை களுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, ரூ.134.29 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மற்றும் 4 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ.11.65 கோடி செலவிலான கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தாம்பரம் சானடோரியத்தில் ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டடத்தையும்  முதலமைச்சர் ஸ்டாலின்
திறந்து வைத்தார்.

தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  ஆயுதப்படைக்கு ஒருங்கிணைந்த கட்டிடம், காவல் நிலையங்கள், குடியிருப்புகளை திறந்த வைத்தார். மேலும்,  ரூ.18.20 கோடியில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்களை முதல்வர் திறந்து வைத்ததுடன்,    தொடர்ந்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தென்னை நார் கொள்கை 2023-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.