சென்னை: அறநிலையத்துறையின் கீழ் தொடங்கப்பட்டுள்ள  கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் இன்று வழங்கினார்.

தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ், 10 கல்லூரிகள் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் அறவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதற்கட்டமாக சென்னை கொளத்தூர் தொகுதி உள்பட 4 இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகள் நடப்பாண்டு தொடங்கப்படுவதாக  அரசாணை வெளியிடப்பட்டது.

அதையடுத்து, புதிய கல்லூரிகளுக்கு தேவையான இடம் மற்றும் உதவி பேராசிரியர்கள், நூலகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வேகமாக நிரப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில்,  அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர்கள், நூலகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 11 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.

முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் உள்பட 4 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள்! மாணவர்கள் சேர்க்கை குறித்து அரசாணை வெளியீடு…!