சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான நகைகளை உருக்கி, அதை வங்கியில் டெபாசிட் செய்து, அதற்கான   தங்க பத்திரத்தை  கோவில் பாதுகாவலரிடம்  முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான தங்க பத்திரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பாதுகாவலரிடம் வழங்கினார். தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ், 168.68 கிலோ தங்கப் பொருட்கள், காணிக்கையாகப் பெறப்பட்டு, கடவுளுக்குப் பயன்படுத்தப்படாதவை, 24 காரட் பார்களாக மாற்றப்பட்டு, SBI வங்கியில் முதலீடு செய்யப்பட்டன. கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ.2.25 கோடி வட்டி கிடைக்கும்.

கடந்த பல ஆண்டுகளாக கோயில்களுக்கு பக்தர்கள் வழங்கிய தங்கம், கோவில்களின் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், தேவைக்கு அதிகமாக உள்ள தங்கத்தை மும்பையில் உள்ள அரசு நாணயச்சாலையில் உருக்கி, அவ்வாறு பெறப்படும் சுத்தமான தங்கம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும்’ என்றும், ‘இது தொடர்பான செயல்முறையை கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்படும்’ என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார்.

அந்த வகையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 100 கோடி மதிப்பிலான 211 கிலோ தங்க நகைகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள்  கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆலய நிர்வாகம் இந்த நகைகளை வங்கியில் டெபாசிட் செய்யப்படும் பொழுது அதில் பொருத்தப்பட்டு இருக்க கூடிய விலை உயர்ந்த கற்கள் மற்றும் மரகதம் போன்ற விலைமதிப்பு இல்லாத கற்களை என்ன செய்திருக்கிறது என்பதை தெளிவுபடுத்தப்படுவது இல்லை. இதில் முறைகேடு நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளது என்றும் குற்றம் சாட்டும் மக்கள்,  தமிழ்நாடு அரசு வங்கியில் தங்கத்தை முதலீடு செய்துள்ளது குறித்து விவரமாக அறிவிக்க மறுத்து வருவதாகவும், வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் நகைககள்  எத்தனை வருடங்களுக்கு வைக்கப்படுகிறது, அதற்கான வட்டி எவ்வளவு என்பது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும்,  மன்னர்கள் மற்றும் ஆலயத்திற்கு நகைகளை கொடுத்த செல்வந்தர்கள் சுவாமிக்கு அலங்காரம் செய்வதற்காகவே தானமாக அளித்தார்கள் தவிர வங்கியில் டெபாசிட்டாக வைக்க அல்ல என்று கண்டித்துள்ள இந்து முன்னணி, எந்த நோக்கத்திற்காக ஆலயத்திற்கு நகைகள் வழங்கப்பட்டதற்கோ அந்த நோக்கத்திற்கே ஆலை நகைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.