சென்னை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டிடங்களை  முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சிமூலம் இன்று திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் 48 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மற்றும் இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான இரண்டு கூடுதல் விடுதிக் கட்டடங்கள், மாணவியர்களுக்கான இரண்டு கூடுதல் விடுதிக் கட்டடங்கள் மற்றும் நூலகக் கட்டடம் ஆகிய கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.