சென்னை: வடசென்னையின் திருவெற்றியூரில் ரூ.272 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், மீனவர்களுக்கான  மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணத்தை  ரூ.5,000ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தி அறிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ராமேஸ்வரத்தில் நடைபெற்ற  மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியபோது,  மீன்பிடி தடை காலம் நிவாரணம் ரூ.8000 ஆக உயர்த்தப்படும் என்றும், மீனவர்களுக்கு  வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்றும் , தேவையான இடங்களில்  தூண்டில் வளைவுகள் அமைக்கப்படும்  உள்பட 10 அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, தற்போது   மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணம் ரூ.5,000ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தபட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

சென்னை திருவெற்றியூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு  ரூ.272 கோடியில் அமைக்கப்பட்ட புதிய மீன்பிடி துறைமுகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தர். தொடர்ந்து,  மாநிலம் முழுவதும்,  ரூ.426 கோடியில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் உள்ளிட்ட 13 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் திறந்துவைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது, சென்னை வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு முக்கியமானது என  கூறியவர்,  மீனவர்களுக்கான  மீன்பிடி தடை காலத்திற்கான நிவாரணத்தை  ரூ.5,000ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்துவதாக  அறிவித்தார்.  மேலும்,  மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க 125 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்றும்,  8,500 மீனவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசியவர், தூதுக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசியில் சேதமடைந்த படகுகளுக்கு ரூ.14 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுகிறது. பாரம்பரிய பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியதுடன்,   மீனவர்களின் நலனை காக்கவே கட்சத்தீவை மீட்க வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க பிரதமர், வெளியுறவு அமைச்சருக்கும் இதுவரை 76 கடிதங்கள் எழுதியுள்ளேன். தொடர் வலியுறுத்தல் காரணமாக  1154 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீனவர்களின் கண்னீரை துடைக்கும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இவ்வாறு கூறினார்.

மீன்பிடி தடை கால நிவாரணம் ரூ.8000, வீட்டு மனை பட்டா, தூண்டில் வளைவுகள்: மீனவர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகள்…