சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து, செங்கல்பட்டில் கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி,  சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ரூ.364 கோடியில் தீவிர சிகிச்சை படுக்கைகள், அதி நவீன கருவிகளுடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில்,  47 தீவிர சிகிச்சை படுக்கைகள், அதிநவீன கருவிகளுடன் ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், ரூ.5.34 கோடியில் இருபது 108 வாகனங்களையும் முதல்வர் தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில், செங்கல்பட்டில் ரூ.60 கோடியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா, இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கட்டமும் காணொளி காட்சி மூலம்  திறக்கப்பட்டது.